Join Us On Facebook

Please Wait 60 Seconds
Close X





நடிகர் தளங்கள்


வானவராயன் வல்லவராயன்
Posted On 2014-09-12


வேலைவெட்டி இல்லாமல் ஊர்சுற்றி திரியும் அண்ணன் தம்பியின் வாழ்க்கை தான் வானவராயன் வல்லவராயன்.கோவை பொள்ளாச்சி அருகில் உள்ள கிராமத்தில் தம்பிராமைய்யா-கோவை சரளாவுக்கு மகன்களாக வானவராயனாக கிருஷ்ணாவும், வல்லவராயனாக மா.கா.பா ஆனந்த்தும் வலம் வருகின்றனர்.ஊர் முழுவதும் சுற்றி பல பெண்களை காதலித்தும் யாரும் திரும்ப காதலிக்காததால் சோகத்தில் இருக்கும் கிருஷ்ணா பக்கத்து ஊரில் நடக்கும் திருமணத்தில் மோனல் கஜ்ஜாரை பார்த்தவுடன் காதலில் விழுகிறார். கிருஷ்ணாவின் சேட்டைகளில் மோனலும் காதல் வயப்படுகிறார். பின் வழக்கம்போல மோனலின் அண்ணன் கோபப்பட்டு கண்டிக்கிறார்.இதையறிந்து மோனலை வீட்டில் கிருஷ்ணா பார்க்க வர அங்கு வசமாக மாட்டிக்கொள்கிறார். இந்த விஷயம் மோனலின் அப்பாவுக்கு தெரியவர திருமணத்துக்கு ஒத்துக்கொள்கிறார். இது தெரியாமல் மா.கா.பா அவரை கண்டபடி பேச அவர் கடுப்பாகிறார். அதன்பின் என்ன நடந்தது என்பதை நகைச்சுவையுடன் செண்டிமெண்ட் எல்லாம் கலந்து சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ராஜமோகன்.யாமிருக்க பயமேன் படத்தில் கலக்கிய கிருஷ்ணா இப்படத்திலும் நகைச்சுவையாகவே நடித்திருக்கிறார். நடிகை மோனலும் அழகாக வந்து போகிறார். வல்லவராயனாக வரும் மா.கா.பா ஆனந்த் முதல் படத்திலேயே பிரமாதப்படுத்தியிருக்கிறார். அவர் பாணியிலேயோ சொல்லவேண்டும் என்றால் “சூப்பரே.......”. மற்றபடி அண்ணனாக வரும் எஸ்.பி. சரண் மற்றும் அப்பாவாக வரும் ஜெயப்ரகாஷ் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.சந்தானம் 15 நிமிடம் மட்டும் வந்து தனது பாணியில் நகைச்சுவை செய்துவிட்டு போயிருக்கிறார். படம் முழுவதும் நகைச்சுவையுடனே சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் தேவையில்லாத காட்சிகளை நீக்கியிருக்கலாம்.யுவன்ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் ஓ.கே. கிராமத்து பசுமையை அழகாக காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் பழனிகுமார்.






சின்னத்துரை சீவரத்தினம்
திருமதி மகாலிங்கம் இரத்தினாவதி



Face Book


இரண்டில் எது செம படம்...?

  1. பாபநாசம்
  2. பாலக்காட்டு மாதவன்
  3. இரண்டுமே தான்
  4. இரண்டுமே சுமார்

        





தகவல்களை mail இல் பெற