Join Us On Facebook

Please Wait 60 Seconds
Close X





நடிகர் தளங்கள்


சசிகலா குற்றவாளி-உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
Posted On 2017-02-15


ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவர்கள் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த 3 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 3 பேரும் 4 வாரத்துக்குள் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதால் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. 1991-1996 ஆம் ஆண்டில் முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் திகதி , ஜெயலலிதா சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சிறைத் தண்டனை விதித்தார் . இதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த தனிநீதிபதி குமாரசாமி அனைவரையும் விடுதலை செய்தார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேன்முறையீடு செய்தது. இந்த மனுவை நீதிபதிகள் பினாக்கி கோஷ், அமித்வா ராய் பெஞ்ச் விசாரித்து தீர்ப்பை ஒத்தி வைத்தது. இவ்வழக்கின் தீர்ப்பை விரைந்து வழங்க கடந்த வாரம் கர்நாடக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வலியுறுத்தி இருந்தார். அப்போது இன்னும் ஒருவாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி பினாக்கி கோஷ் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் இன்று (பெப்ரவரி 14) இந்த வழக்கில் தீர்ப்பு வெளியானது. இதேவேளை சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசி கலா அடுத்த 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.இதனால் சசிகலாவின் அரசியல் வாழ்க்கை ஆரம்பிக்கா மலேயே முடிவுக்கு வந்துவிட்டது






சின்னத்துரை சீவரத்தினம்
திருமதி மகாலிங்கம் இரத்தினாவதி



Face Book


இரண்டில் எது செம படம்...?

  1. பாபநாசம்
  2. பாலக்காட்டு மாதவன்
  3. இரண்டுமே தான்
  4. இரண்டுமே சுமார்

        





தகவல்களை mail இல் பெற