Join Us On Facebook

Please Wait 60 Seconds
Close X

நடிகர் தளங்கள்


இன்றைய ராசி பலன்கள்
Posted On 2017-02-07


மேஷம் நல்ல தகவல் இல்லம் தேடி வந்து சேரும் நாள். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் பணிபுரிவீர்கள். சகோதர வழியில் ஏற்பட்ட சண்டை, சச்சரவுகள் அகலும். தொழில் முன்னேற்றம் உண்டு. ரிஷபம் நிலையான வருமானத்திற்கு வழிவகுத்துக் கொள்ளும் நாள். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும். வருமானம் வரும் வழியைக் கண்டு கொள்வீர்கள். வீடு மனை வாங்க போட்ட திட்டம் நிறைவேறலாம். மிதுனம் நிகழ்காலத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும் நாள். நிம்மதிக்காக ஆலயத்தை நோக்கி ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது. கணபதி வழிபாடு காரிய வெற்றியைத் தரும். கடகம் விழிப்புணர்ச்சியுடன் செயல்பட்டு விரயங்களைச் சமாளிக்க வேண்டிய நாள். குடும்பத்தாருடன் குதூகலப் பயணமொன்றை மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. செலவுகள் அதிகரிக்கலாம். சிம்மம் லாபம் இருமடங்காகும் நாள். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். அந்நியர்களின் ஆதரவ கூடும். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். தொலைபேசி வழி தகவல் மகிழ்ச்சி தரும். கன்னி புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் புகழ் பெறும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். நீங்கள் தேடிச் சென்று பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வரலாம். துலாம் வாரிசுகளால் வளர்ச்சி கூடும் நாள். தடைப்பட்ட காரியங்கள் இன்று தானாகவே நடைபெறும். பணவரவு போதுமானதாக இருக்கும். சில நாட்களாக தொழிலில் இருந்த மந்தமான நிலை மாறும். விருச்சகம் யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். மற்றவர்களை நம்பிச் செயல்பட முடியாது. தொழில் ரீதியாக பயணங்கள் ஏற்படலாம். குடும்பத்தினர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. தனுசு விடிகாலையிலேயே வியக்கும் செய்தியொன்று வந்து சேரும் நாள். கல்யாண பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவிற்கு வரும். அயல்நாட்டிலிருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக் கொள்ள முன்வருவீர்கள். மகரம் பாசம் மிக்கவர்கள் பக்கபலமாக இருக்கும் நாள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தொழில், உத்தியோகத்தில் மாற்றம் செய்வது பற்றி சிந்திப்பீர்கள். நேற்றைய பிரச்சினையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். கும்பம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். எந்தக் காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் வருங்கால நலன் கருதி சேமிக்கும் எண்ணம் மேலோங்கும். மீனம் விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டும் நாள். வாகன பராமரிப்பில் அதிக அக்கறை ஏற்படும். சுபச்செய்திகள் வந்து சேரலாம். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முற்படுவீர்கள்.


சின்னத்துரை சீவரத்தினம்
திருமதி மகாலிங்கம் இரத்தினாவதிFace Book


இரண்டில் எது செம படம்...?

  1. பாபநாசம்
  2. பாலக்காட்டு மாதவன்
  3. இரண்டுமே தான்
  4. இரண்டுமே சுமார்

        

தகவல்களை mail இல் பெற