Join Us On Facebook

Please Wait 60 Seconds
Close X





நடிகர் தளங்கள்


இன்றைய ராசி பலன்கள்
Posted On 2017-02-06


மேஷம் சந்தோ‌ஷ வாய்ப்புகளை சந்தித்து மகிழும் நாள். சாட்சிக் கையொப்பமிட்டதால் வந்த பிரச்சினை அகலும் நாள். நிதி நிலை உயரும். கட்டிடப் பணியில் அதிக அக்கறை காட்டுவீர்கள். ரிஷபம் வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். வருமானம் திருப்தி தரும். குல தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றும் எண்ணம் மேலோங்கும். பயணங்களில் சிறு மாற்றம் ஏற்படலாம். மிதுனம் விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் கூடலாம். வியாபார விரோதம் அதிகரிக்கும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதத்தில் நடந்து கொள்வார்களா? என்பது சந்தேகம் தான். கடகம் தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். தெய்வ பலம் மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து சில காரியங்களை முடித்துக் கொடுப்பர். வருங்காலத்திற்காக சேமிக்க முற்படுவீர்கள். சிம்மம் அதிகாரிகளால் அனுகூலம் கிடைக்கும் நாள். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற நண்பர்கள் ஒத்துழைப்பு செய்வர். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும். கன்னி திடீர் முடிவெடுத்து திறமையை வெளிப்படுத்தும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறி கூட்டு முயற்சிக்கு ஒத்துழைப்பு செய்வர். உடல் நலனில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும். துலாம் உச்சரிக்கும் சொற்களில் உஷாராய் இருக்க வேண்டிய நாள். ஊர்மாற்றம், வீடுமாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். எப்படியும் முடிந்து விடும் என நினைத்த காரியமொன்றில் தடை, தாமதங்கள் உருவாகலாம். விருச்சகம் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிட்டும். வருமானம் திருப்தி தரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிக்கு வித்திடுவீர்கள். பயணத்தால் பலன் உண்டு. தனுசு ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். உத்தியோகம் சம்பந்தமாக மாற்றங்கள் செய்யும் எண்ணம் மேலோங்கும். நீண்ட நாட்களாக நிலவிய பிரச்சினையொன்று நல்ல முடிவிற்கு வரும். மகரம் பரபரப்பாகச் செயல்பட்டு பாராட்டு மழையில் நனையும் நாள். குடும்ப முன்னேற்றம் கூடும். எடுத்த முயற்சி கை கூடும். பாதியில் நின்ற கட்டிடப்பணிகளை மீதியும் தொடரும் எண்ணம் மேலோங்கும். கும்பம் போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். பெற்றோர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லை அகலும். மீனம் உறவினர் வருகையால் உள்ளம் மகிழும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். பெண்வழி பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். தொழில் ரீதியாக புதிய அனுபவங்கள் ஏற்படலாம்.






சின்னத்துரை சீவரத்தினம்
திருமதி மகாலிங்கம் இரத்தினாவதி



Face Book


இரண்டில் எது செம படம்...?

  1. பாபநாசம்
  2. பாலக்காட்டு மாதவன்
  3. இரண்டுமே தான்
  4. இரண்டுமே சுமார்

        





தகவல்களை mail இல் பெற