Join Us On Facebook

Please Wait 60 Seconds
Close X

நடிகர் தளங்கள்


Posted On 2015-01-14


ஷங்கர் மற்றும் விக்ரமின் கடினமாக 2 வருட தவத்திற்கு கிடைத்த பலன் தான் இந்த ஐ. தமிழ் சினிமாவில் பெருமை உலக அரங்கிற்கு எடுத்த செல்லும் முதல் முயற்சியை ஷங்கர் தான் எந்திரன் படத்தில் செய்தார் இதையே ஐ படத்தில் ஒரு படி மேலேயே கொண்டு சென்றுள்ளார்.ஒரு மனிதன் ஒரு படத்திற்காக இத்தனை சிரமம் எடுக்க முடியுமா? என்றால் அது கமலுக்கு பிறகு விக்ரமிற்கே சாத்தியம் என்று இப்படம் மூலம் மீண்டும் நிருபிக்கப்பட்டது. கதை படத்தின் ஆரம்பமே கூன் விழுந்த விக்ரம் , எமி ஜாக்சனை கடத்துவதிலிருந்து தொடங்குகிறது படம். அவர் எப்படி இவ்வளவு விகாரமாக ஆனார் என்பதையே கூறுகிறது மீதி படம்.சின்னதாக ஒரு ஜிம்மை நடத்திக் கொண்டு மிஸ்டர் மெட்ராஸ் ஆக வேண்டும் மிஸ்டர் இந்தியா ஆக வேண்டும் எனும் பெரிதான லட்சியங்களுடன் வெயிட் லிப்ட்டும் பாடி பில்டப்புமாக சென்னை தமிழ் பேசிக் கொண்டு லீ எனும் லிங்கேசன் விக்ரம், தன் ஆசைபடியே தடைகள் பலவற்றை கடந்து மிஸ்டர் மெட்ராஸ் ஆகிறார்.கட்டுடலும், கம்பீரமுமாக திரியும் விக்ரமை ஒருநாள் அவரது நண்பர் சந்தானம், விக்ரமுக்கு பிடித்த மாடல் அழகி தியா எனும் நாயகி எமி ஜாக்சனின் பாதுகாப்பிற்காக விளம்பர பட ஷூட்டிங் ஒன்றிற்கு அழைத்து போக, அங்கு விக்ரமின் கைமாறு கருதாத அன்பை கவனத்தில் கொள்ளும் எமி, தன் சக மாடல் நடிகர் ஜானின் செக்ஸ் டார்ச்சர் பொறுக்க முடியாமல் ஜானுக்கு போட்டியாக விக்ரமை பெரிய மாடலாக்கி சீனாவிற்கு ஒரு பெரும் விளம்பர படத்திற்காக கூட்டி போகிறார்.மிஸ்டர் இந்தியா ஆசையை துறந்து விக்ரமும் சீனா சென்று எமியுடன் இணைந்து நடிக்கிறார். அவரது கூச்சத்தை போக்க, எமியை இயக்குநர், விக்ரமை நிஜமாக காதலிப்பது போல் நடி என அட்வைஸ் சொல்கிறார். இதற்கு முதலில் மறுக்கும் எமி, விக்ரம் ஒழுங்காக நடிக்கவில்லை என்றால் மீண்டும் ஜானுடன் இணைந்து நடிக்க வேண்டிய இக்கட்டான சூழலை தவிர்க்க விரும்பி விக்ரமை நிஜமாக காதலிப்பது போல் நடிக்கிறார்.இந்த விளம்பர படம் இயல்பாக வந்து அந்நிறுவன வியாபாரம் பெருக பெரிதும் உதவுகிறது. இதற்குள் விக்ரம் - எமிக்கிடையே உண்மையாகவே காதலும் மலருகிறது. அதன்பின் ராசியான விக்ரமும், எமியும் மீண்டும் மீண்டும் ஜோடி சேர்ந்து மாடலிங் உலகை கலக்குகின்றனர். இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறார் ஜான்.அவரை போலவே மேலும் பல பேர் விக்ரமால் பாதிக்கப்பட்டதாக கூறி அவரை கொலை செய்ய முனைகிறார்கள். உலகுக்கு தெரியாமல் விக்ரமை ஒழித்துகட்ட போடும் திட்டம் தான் ஐ எனும் வைரஸ், சுவிட்சர்லாந்தில் இருந்து வரவழைக்கப்படும் ஐ வைரஸ் விக்ரமின் உடம்பிற்குள் அவருக்கே தெரியாமல் ஊசி மூலம் ஏற்றப்பட, விளம்பரப் படவுலகில் முடிசூடா மன்னனாக இருந்த விக்ரம் முடி இழந்து முகம், பல், சொல் அனைத்தையும் இழந்து கூன் விழுந்து, கொடூரமாக மாறுகிறார். இதற்கு பிறகு எமிக்கு தன் காதலை புரிய வைத்தாரா? தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய வில்லன்களை பழி தீர்த்தாரா? எனபதே மீதிக்கதை. நடிகர், நடிகைகளின் பங்களிப்பு! இயக்குனர் ஷங்கர் தனது வழக்கமான பிரம்மாண்ட காட்சிகளால் மிகவும் கவர்கிறார். சண்டைக் காட்சிகளில் மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டத்தை காட்டியிருக்கிறார். விக்ரம் தன் கெட்டப்பிற்காக ரொம்பவும் சிரமப்பட்டிருக்கிறார் என்பது படத்தில் நன்றாக தெரிகிறது.படத்திற்கு மற்றொரு பெரிய பலம் ஏ.ஆர்.ரகுமானின் இசை தான். இவருடைய பின்னணி இசையாகட்டும், பாடல்களாகட்டும் இரண்டிலும் தான் ஒரு இசைப்புயல் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பின் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கண்களுக்கு அழகான விருந்தளிக்கிறது. குறிப்பாக, பாடல் காட்சிகளிலும், சண்டை காட்சிகளிலும் இயக்குனரையே மிஞ்சிவிட்டார். க்ளாப்ஸ் விக்ரம், விக்ரம், விக்ரம் ஒருவரே ஒட்டு மொத்த கைத்தட்டலையும் பெற்று விடுகிறார். எமி மிக அழகாக இருக்கிறார். டீன் ஏஜ் இளைஞர்களுக்கு செம்ம விருந்து. பின்னணி இசை மற்றும் பி.சியின் இத்தனை ஆண்டு அனுபவ ஒளிப்பதிவு. பல்ப்ஸ் படம் கொஞ்சம் நீளம், திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம் மற்றப்படி ஏதும் இல்லை.மொத்தத்தில் ஐ தமிழ் சினிமாவின் முத்திரை என்பதை ஐயம் இன்றி சொல்ல வைத்துள்ளது.


சின்னத்துரை சீவரத்தினம்
திருமதி மகாலிங்கம் இரத்தினாவதிFace Book


இரண்டில் எது செம படம்...?

  1. பாபநாசம்
  2. பாலக்காட்டு மாதவன்
  3. இரண்டுமே தான்
  4. இரண்டுமே சுமார்

        

தகவல்களை mail இல் பெற