Download WordPress Themes, Happy Birthday Wishes

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாம் மட்டக்களப்பில் முற்றுகை! பல தகவல்கள் அம்பலம் (அதிர்ச்சி படங்கள் இணைப்பு)

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாமாகவும், நாட்டில் இடம்பெற்ற தாக்குதல்களின் பிரதான பயற்சி நிலையமாகவும் மட்டக்களப்பில் செயற்பட்டு வந்த இடம் இன்று அதிகாலை விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்மனை, ஒல்லிக்குளம் பகுதியிலேயே இந்த முகாம் இயங்கி வந்துள்ளது.

இந்த அமைப்பினை சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் அப்துல் ரவூப் என்பவரை கைது செய்து அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த முகாம் தொடர்பில் தெரியவந்ததாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த முகாமில் வைத்து, சாய்ந்தமருதில் தற்கொலை தாக்குதலில் பலியான தற்கொலைதாரியான ரில்வான் என்பவர் 2017ஆம் ஆண்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது குண்டுவெடித்து கைவிரல்களையும், கண் ஒன்றையும் இழந்ததாக ஆரம்ப கட்ட விசாரணையின் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இங்கிருந்தே தற்கொலை தாக்குதலுக்கான பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும், குண்டுகள் இங்கிருந்தே அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் பாதுகாப்பு தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் முகாமில் இருந்து குண்டுகளை அடைத்து கொண்டு செல்ல பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் குழாய்களும் தயார் செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

இது போன்ற குழாய்களே கடந்த 21ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் குண்டுகளுடன் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இங்கிருந்துதான் அங்கு கொண்டுசெல்லப்பட்டதா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த முகாமிற்காக நூறு மீற்றர் தூரத்திற்குள் யாரும் நுழையும் போது அதனை கண்டுகொள்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், முகாமில் இருந்து இரகசியமான முறையில் வெளியேறும் வழியும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், புலனாய்வுத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

பாடசாலைகள் திறக்கும் திகதிகள் திடீர் மாற்றம்! கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கும் திகதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ...