Download WordPress Themes, Happy Birthday Wishes

உயிருடன் இருக்கும் பிரதான தற்கொலை குண்டுதாரி! பல தாக்குதல்களை நடத்த திட்டம்

கொழும்பில் தொடர் குண்டுத்தாக்குதல்களை நடத்திய பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹசிமின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக புலனாய்வுப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று ஷங்கிரிலா ஹோட்டலில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டு வெடிப்பில் அவர் உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது. எனினும் அவர் உயிரிழக்கவில்லை என புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஷங்கிரிலா ஹோட்டலுக்கு சஹ்ரான் வந்த போதிலும் அவர் தற்கொலை குண்டுத்தாக்குதலில் உயிரிழக்க வில்லை என புலனாய்வு பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளளர்.

அதற்கு பதிலாக ரிமோட் கொண்டு குண்டை வெடிக்க வைப்பதற்கு சஹ்ரான் நடவடிக்கை மேற்கொண்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

காணொளிகளில் உள்ள தற்கொலை குண்டுதாரியின் உடலுக்கும், சஹ்ரானின் உண்மையான புகைப்படங்களுக்கும் இடையில் வித்தியாசங்கள் உள்ளதாக புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் உண்மை தன்மையை அறிவதற்காக DNA பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவரும் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஆதரவை பெற்றவருமான சஹ்ரான் தற்கொலை குண்டுதாக்குதல் மேற்கொள்வதற்காக கடும் பயிற்சிகளை அளித்துள்ளார்.

சஹ்ரான் தனது அமைப்பிற்கு இரண்டாவது தலைவர் ஒருவரை பெயரிடவில்லை. தனது அமைப்பிற்கு பணிகளை வழங்கிய சஹ்ரான் தற்கொலை குண்டுத்தாக்குதலில் உயிரிழப்பதற்கான சாத்தியங்கள் இல்லை என புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

சஹ்ரான் இன்னமும் உயிருடன் இருப்பார் எனவும், வேறு வழியில் அவர் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கலாம் எனவும் புலனாய்வு பிரிவு நம்புவதாக அரசாங்க நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்! மைத்திரியின் திடீர் நடவடிக்கை

யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பேராசிரியர் இ.வின்னேஸ்வரன் நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ...