Download WordPress Themes, Happy Birthday Wishes

இலங்கை ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு பெருமளவு பணம் கொடுத்த பிரபல வர்த்தகர்கள்! விசாரணையில் சிக்கினர்

கொழும்பில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களுக்கு பெருமளவு நிதி வழங்கப்பட்டுள்ளமை குறித்து புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வரையில் சில பிரபல வர்த்தக்கள் இனங்காணப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

தெமட்டகொட மஹவில பூங்காவுக்கு அருகில் வசிக்கும் கோடீஸ்வர வர்த்தகர் இப்ராஹிம் மற்றும் குளியாப்பிட்டி தங்க விற்பனையாளர் ஆகிய இருவரும் நிதி வழங்கியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த இருவரும் குற்ற விசாரணை திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட தீவிரவாதிகளுக்கு சர்வதேச ரீதியில் பாரியளவு நிதி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் அதிக நிதி துருக்கி ஊடாகவே கிடைத்துள்ளது.

அரச சார்பற்ற அமைப்பு ஒன்றினால் அந்த பணம் கிடைத்தள்ளதாக இதுவரையில் தெரியவந்துள்ளது. இதற்கு மேலதிகமாக மேலும் பல நாடுகளினால் இந்த தீவிரவாதிகளுக்கு பாரியளவு பணம் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. அந்த பணம் சட்டவிரோத முறை ஊடாக கிடைத்துள்ளதாக புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

தீவிரவாதிகளின் மட்டக்களப்பு பள்ளிவாசலும் சட்டவிரோத பணத்தின் ஊடாகவே நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக வான், லொரி, மோட்டார் வாகனங்கள் மற்றும் 20 மோட்டார் சைக்கிள்கள் இந்த பணம் ஊடாகவே கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 20 வாகனங்கள் குற்ற விசாரணை திணைக்களத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்! மைத்திரியின் திடீர் நடவடிக்கை

யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பேராசிரியர் இ.வின்னேஸ்வரன் நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ...