Download WordPress Themes, Happy Birthday Wishes

பல நாட்கள் கோமாவில் இருந்து எழுந்த இளைஞருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

தற்கொலை முயற்சியால் பல நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு இளைஞர், விழித்தபோது வந்த மருத்துவ ரசீதை பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த ஆலிவர் ஜோர்டான் (24) என்கிற இளைஞர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளைஞருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.

ஒரு வார காலம் கோமாவில் இருந்த ஆலிவர் விழித்தெழுந்ததும், அவர் மருத்துவமனையில் தங்கியிருந்த மற்றும் சிகிச்சை பெற்றதற்கான ரசீது வழங்கப்பட்டது.

அதில், இதுவரை மொத்தமாக $ 93,000 (£ 71,500) செலவாகியிருப்பதாக ரசீது வந்துள்ளது. இதனை பார்த்ததும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆலிவர், அமெரிக்காவில் தற்கொலை முயற்சி செய்வது எவ்வளவு விலை உயர்ந்தது என்பது இது தான். நான் இதனால் பெரும் மனசோர்வடைந்தேன் என பதிவிட்டிருந்தார்.

இதனை பார்த்த இணையதளவாசிகள் பலரும் அவருக்கு ஆறுதலான வார்த்தைகளை கூறி வருகின்றனர்.

அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் ஆலிவர் சுகாதார காப்பீடு செய்திருந்ததால், பெரும்பாலான தொகை அதிலிருந்து பிடித்தம் செய்யப்பட்டிருக்கிறது.

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்! மைத்திரியின் திடீர் நடவடிக்கை

யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பேராசிரியர் இ.வின்னேஸ்வரன் நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ...