Download WordPress Themes, Happy Birthday Wishes

படகில் உட்கார்ந்து முத்தம் கொடுக்கும் போது தண்ணீரில் விழுந்த கேரள புதுமணதம்பதி…. வைரலாகும் வீடியோ

கேரளாவில் திருமணத்துக்காக பிரத்யேகமாக புகைப்படம் எடுக்கும் நிகழ்வின் போது மணமக்கள் நதியில் விழுந்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

திருமணத்துக்கு புகைப்படம் எடுக்கும் கலைஞர்கள் தங்கள் தனித் தன்மையைக் காட்ட மணமக்களை வித்தியாசமான கோணங்களில் புகைப்படம் எடுப்பது வழக்கம்.

அந்த வகையில் கேரள மாநிலத்தை சேர்ந்த புதுமணதம்பதிகளான திஜின் – சில்பாவை பம்பை நதிக்கு அழைத்துச் சென்ற புகைப்படக் கலைஞர் படகில் அவர்களை உட்கார வைத்தார்.

பின்னர் அவர்கள் தலைக்கு மேல் குடை போல் பிடித்துக் கொள்ளச் செய்து காதல் உணர்வுடன் விதவிதமாக புகைப்படம் எடுத்து கொண்டிருந்தார்.

அப்போது இருவரையும் முத்தம் கொடுத்து கொள்ளுபடி புகைப்படம் கலைஞர் கூறினார்.

இதையடுத்து இருவரும் முத்தம் கொடுக்க முயன்ற போது படகிலிருந்து அப்படியே தண்ணீரில் விழுந்தனர்.

ஆனால் கரையின் ஓரம் என்பதால் அங்கு ஆழம் இல்லை, இது குறித்து புகைப்பட கலைஞர் கூறுகையில், நாங்கள் திட்டமிட்டு தான் விளையாட்டுக்காக படகிலிருந்து தம்பதியை விழ செய்தோம், இது அவர்களுக்கு தெரியாது.

கீழே விழுந்ததை விபத்து என முதலில் அவர்கள் நினைத்து விட்டார்கள் என கூறியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்! மைத்திரியின் திடீர் நடவடிக்கை

யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பேராசிரியர் இ.வின்னேஸ்வரன் நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ...