Download WordPress Themes, Happy Birthday Wishes

பிரான்சில் பற்றி எரியும் பேராலயத்தில் கட்டுப்படுத்த முடியாத பெரும் தீ! கதறி அழும் மக்கள்.. (வெளியான நேரடி காணொளி)

பிரான்ஸ் தலைநகர் பரிசின் வரலாற்று புகழ் வாய்ந்த நோத்ர்டாம் து பரிஸ் பேராலயத்தில் இன்று மாலை ஏற்பட்ட பெரும் தீ விபத்து உலகளாவியரீதியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது

தீPயை அணைப்புப்பணியில் சுமார் 400 தீயணைப்புப்படையினர்மிகக்கடுமையாக போராடி வருகின்றனர்.

பிரெஞ்சு அரச தலைவர் இமானுவேல் மக்ரோன் அந்த இடத்துக்கு சென்றுள்ளார். தீவிபத்து காரணமாக பேராலயத்தின் கூரையும் மேற் கூம்பு கோபுரமும் இடிந்துவிழுந்துள்ளது.

தற்போது பிரதான கோபுரத்திலும் தீபரவியுள்ளமதல் தேவாலயத்தின் எதிர்காலநிலைமை கவலைக்கிடமாகியுள்ளது.

தேவாலயத்தில் இரண்டு பிரதான கோபுரங்களில் ஒன்றில் இருந்துதான் இந்த தீ பரவியதாக கூறப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து உடனடியான விசாணைகளுக்கு பரிஸ் நகர வழக்குத்தொடுனர் உத்தரவிட்டுள்ளார்.

உலகின் முக்கிய தலைவர்கள் இந்த தீவிபத்து குறித்து தமது அதிர்ச்சி செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

எமது அன்னை அர்த்தத்துக்குரிய பெயரான நோர்த் டாம் எனப்படும் இந்தப் பேராலயம் வரலாற்று புகழ் வாய்ந்தது.

பிரெஞ்சு கோத்திக் கட்டிடக்கலையின் முக்கியஅடையாளமான இந்த ஆலயமே பரிஸின் உயர் மறைமாவட்டத்தின் முதன்மைப் பேராலயமாகும்.

பரிஸ்நகரில்உல்லாசப்பயணிகளை கவரும் முக்கிய மையம் இது.

மிகப்புராதன கோதிக் பேராலயங்களுள் ஒன்றான இதன் கட்டுமானப்பணிகள்கி. பி. 1163 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டன.

ஆயினும் பகுதிபகுதியாக பல ஆண்டுகளாக இதன் கட்டுமானப்பணி இடம்பெற்றது.

1793 இல் நடந்த பிரஞ்சுபுரட்சியில் நடந்த வன்செயல்களாலும், இரண்டு உலகப் போர்களின் வன்முறையாலும், இந்த ஆலயம் சேதமடைந்தது எனினும் இன்று மாலைஏற்பட்ட தீவிபத்து மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது தேவாயலத்தில் திருத்தப்பணிகள் இடம்பெற்றபோதே இந்ததீவிபத்து ஏற்பட்டுள்ளது.

தற்போது பிரதான கோபுரத்திலும் தீபரவியுள்ளதால் மக்கள் ஆற்றொணா துயரத்தில் கதறியழுது வருகின்றனர்.

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்! மைத்திரியின் திடீர் நடவடிக்கை

யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பேராசிரியர் இ.வின்னேஸ்வரன் நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ...