Download WordPress Themes, Happy Birthday Wishes

உலகக் கோப்பைக்கான அசத்தலான நியூசிலாந்து அணி அறிவிப்பு!

உலகக் கோப்பை தொடரில் விளையாட உள்ள கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் மே மாத இறுதியில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் விளையாட உள்ள 15 பேர் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கேப்டனாக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ள இந்த அணி, சம பலம் வாய்ந்த சிறந்த வீரர்களை கொண்டுள்ளது. இந்த அணியில் இதுவரை சர்வதேச போட்டிகளில் விளையாடாத டாம் பிளன்டெல் என்ற வீரர் இடம்பிடித்துள்ளார்.

இவர் மாற்று விக்கெட் கீப்பராக செயல்பட உள்ளார். அதிக போட்டிகளில் விளையாடிய மூத்த வீரராக ராஸ் டெய்லர் இந்த அணியில் இடம்பிடித்துள்ளார்.

மார்டின் கப்தில், கிராண்ட்ஹோம், காலின் மன்றோ ஆகியோர் துடுப்பாட்டத்திலும், டிம் சௌதி, டிரண்ட் போல்ட் ஆகியோர் பந்துவீச்சிலும் மிரட்ட உள்ளனர்.

திறமையான வீரர்களை கொண்டுள்ள நியூசிலாந்து அணி, இந்த உலகக் கோப்பை தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அணி விபரம்
கேன் வில்லியம்சன் (கேப்டன்)
டிரண்ட் போல்ட்
பெர்குசன்
மேட் ஹென்றி
டாம் லாதம்
காலின் மன்றோ
ஜிம்மி நீஷம்
ஹென்றி நிக்கோலஸ்
மிட்செல் சாண்ட்னர்
கிராண்ட்ஹோம்
டாம் பிளண்டெல்
சோதி
டிம் சௌதி
மார்டின் கப்தில்

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

யாழிலுள்ள பிரபல பாடசாலைக்கு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிய பயங்கரவாத அமைப்பு

யாழ்ப்பாணம் சுண்டிக்குளி மகளிர் கல்லுரிக்கு பயங்கரவாத அமைப்பின் பெயரில் எச்சரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேசிய தௌஹீத் ஜமா அத்- ...