Download WordPress Themes, Happy Birthday Wishes

“யாழ்மின்னல்” வாராந்த  பத்திரிகை நாளையதினம் உத்தியோகபூர்வ வெளியீடு

எமது இணையத்தளத்தின் வாராந்த  பத்திரிகையான “யாழ்மின்னல்” பத்திரிகை நாளையதினம் உத்தியோகபூர்வமாக வெளியீட்டு வைக்கப்படவுள்ளது.

“யாழ்மின்னல்” பத்திரிகையின் பதில் முகாமையாளரான ஜீ. சிந்துஜா தலைமையில் நாளை (27) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் கோப்பாய் சந்தியில் அமைந்துள்ள மகாதேவா ஷாப்பிங் கொம்பிளெக்ஸ் (Mahadeva Shopping Complex) கட்டட தொகுதியில் குறித்த வெளியீட்டு நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதமவிருந்தினராக யாழ். மாவட்ட அரச அதிபர் திரு. நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் சிறப்பு விருந்தினராக கிருபா லேணர்ஸ் நிறுவனத் தலைவர் திரு.அ. கிருபாகரன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதேவேளை யாழ் முன்னணி ஆசிரியர் (அறிவொளி வெளியீடு) திரு. எம்.எஸ். குகன் அவர்கள் பத்திரிகை அறிமுக உரையாற்ற உள்ளமை விசேட அம்சமாகும்.

குறித்த நிகழ்வில் பொதுமக்கள், நலன்விரும்பிகள் உட்பட அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு யாழ்மின்னல் பத்திரிகை குடும்பம் அன்புடன் அழைக்கின்றது.

About webadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்! மைத்திரியின் திடீர் நடவடிக்கை

யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பேராசிரியர் இ.வின்னேஸ்வரன் நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ...