News

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்
பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும் நாள். தைரியத்தோடு செயல்படுவீர்கள். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். சகோதர ஒத்துழைப்பால் பாகப் பிரிவினைகள் சுமுகமாக முடியும். அரசு வழி அனுகூலம் உண்டு.

ரிஷபம்
தாராளமாகச் செலவிட்டு மகிழும் நாள். உள்ளன்போடு பழகியவர்களின் எண்ணிக்கை உயரும். உத்தியோகத்தில் உயர்வுகள் வந்து சேரலாம். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

மிதுனம்
அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். அன்பு நண்பர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். பயணத்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். உடல் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. மதிப்பும், மரியாதையும் உயரும்.

கடகம்
விருப்பங்கள் நிறைவேறும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். குடும்ப பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடக்க முன்வருவீர்கள். தொழில் மாற்றச் சிந்தனை உருவாகும்.

சிம்மம்
விரயங்கள் கூடும் நாள். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமைகளைக் கண்டு மேலதிகாரிகள் வியப்பர். பண விவகாரங்களில் நாணயத்தைக் காப்பாற்றுவீர்கள்.

கன்னி
பணம் பலவழிகளிலும் வந்து பையை நிரப்பும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரியவர்களாக நடந்து கொள்வர். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.

துலாம்
கனவுகள் நனவாகும் நாள். தடைப்பட்ட ஒப்பந்தங்கள் தானாக வந்து சேர்வது கண்டு ஆச்சர்யப்படுவீர்கள். மற்றவர்களின் விமர்சனங்களை மறந்து செயல்படுவது நல்லது. தந்தை வழியில் தனலாபம் உண்டு.

விருச்சகம்
காரிய வெற்றி ஏற்படும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். விட்டுப் போன வரன் மீண்டும் வந்து சேரலாம்.

தனுசு
சவால்களைச் சமாளிக்க வேண்டிய நாள். பிறர் மனதைப் புரிந்து கொண்டு செயல்படுவதால் பிரச்சினைகள் அகலும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். உறவினர் பகை உருவாகலாம்.

மகரம்
வருமானம் திருப்தி தரும் நாள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். நண்பர்கள் ஒளிவு மறைவின்றி பழகுவார்கள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.

கும்பம்
வசதிகள் பெருகும் நாள். பிள்ளைகள் வழியில் பெருமையான தகவல் வந்து சேரும். கூட்டுத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இடம், பூமி வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறும். வருமானம் திருப்தி தரும்.

மீனம்
வரவு அதிகரிக்கும் நாள். நண்பர்களின் ஒத்துழைப்பால் புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். பழைய வாகனத்தைக் கொடுத்து புதிய வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். தொலை பேசி வழித் தகவல் மகிழ்ச்சி தரும்.

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close