Download WordPress Themes, Happy Birthday Wishes

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்
திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றம் ஏற்படும் நாள். உடல் நலத்தில் கவனத்தைச் செலுத்துவது நல்லது. தொழில் ரீதியான பயணமொன்று தாமதப்படலாம். மறதி அதிகரிக்கும். நண்பர்களால் விரயம் உண்டு.

ரிஷபம்
எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும் நாள். அலைச்சல் சற்று அதிகரிக்கும். குடும்பத்தினர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் விருப்பங்கள் நிறைவேறும். உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

மிதுனம்
ஆதாயம் அதிகரிக்கும் நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவலொன்று வந்து சேரலாம். அன்னிய தேசத் தொடர்பு அனுகூலம் தரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள்.

கடகம்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். அரசு வழிக் காரியங்கள் அனுகூலமாக முடிவடையும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடருவீர்கள். வரவும் செலவும் சமமாகும். பயணங்களால் பலன் உண்டு.

சிம்மம்
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். கூட்டுத் தொழிலை தனித் தொழிலாக மாற்றலாமா என்ற சிந்தனை மேலோங்கும். அலுவலகப் பணிகளில் இருந்த அல்லல் தீரும்.

கன்னி
முன்னேற்றம் காண முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். உத்தியோக மாற்றச் சிந்தனை மேலோங்கும். நண்பர்களுக்காக ஒரு தொகையைச் செலவிடுவீர்கள். ஆலய வழிபாட்டால் அமைதி காண இயலும்.

துலாம்
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். ஆடை, ஆபரண, அலங்காரப் பொருட்களை வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும்.

விருச்சகம்
பாக்கிகள் வசூலாகிப் பணவரவைப் பெருக்கும் நாள். கண்ணியமிக்கவர்கள் கைகொடுத்து உதவ முன்வருவர். மாற்று மருத்துவத்தை மேற்கொள்வதால் உடல்நலம் சீராகும். உங்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவர்.

தனுசு
மதிநுட்பத்தால் மகத்தான காரியமொன்றைச் செய்து முடிக்கும் நாள். வெளிவட்டாரத் தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டு. பிள்ளைகளால் உதிரி வருமானம் உண்டு.

மகரம்
கடிதம் மூலம் கனிந்த தகவல் வந்து சேரும் நாள். நினைத்தது நிறைவேறி நிம்மதி காண்பீர்கள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் உதவி கிடைக்கும். வாகனப் பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். பொதுவாழ்வில் புகழ்கூடும்.

கும்பம்
இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். உறவு பகை பாராமல் அனைவருக்கும் உதவி செய்வீர்கள். அரசியல் பிரமுகர்களால் ஆதாயம் உண்டு. தடைப்பட்ட வருமானம் தானாகவே வந்து சேரலாம்.

மீனம்
கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். இல்லத்தினர்களின் ஒத்துழைப்போடு இனிய பணிகளைச் செய்து முடிப்பீர்கள். உயரதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். எதிர்பாராத வரவு ஒன்று வந்து சேரும்.

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*