Download WordPress Themes, Happy Birthday Wishes

பேஸ்புக் ஊடாக ஒன்றிணைந்து இளைஞர்கள் யாழில் கறுப்பு பட்டியணிந்து போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரியும் அவர்களுக்கு என்ன நடந்த்து என்பதை அரசு கூற வேண்டும் என வலியுறுத்தியும் கறுப்பு பட்டியனிந்த கண்டன போராட்டம் ஒன்று இன்று காலை 10.30 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றது.

பேஸ்புக் ஊடாக விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமைய ஒன்றுகூடியவர்கள் இப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

தமது வாய்களை கறுப்பு துனிகளால் கட்டியவாறு, கைகளில் எதிர்ப்பு பதாதைகளை தாங்கியவாறும், தீபங்களை கொழுத்தியும் இவர்கள் இவ் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அரசே காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பதில் கூறு, நீதியை வழங்கு, விசாரணைகளை முன்னெடுக்காமல் ஓஎம்பி என் செய்கின்றது?, கடத்தல்காரர்களை தண்டிக்க தயங்கும் அரசே! குற்றவாளிகளை காப்பாற்றவா உனக்கு மக்கள் ஆணை வழங்கினார்கள்?

“இலங்கையின் இறயான்மையும் எனது மகனும் ஒன்றா, மக்களின் பிரதிநிகளே எமது மக்களின் கண்ணீர் உங்களுக்கு வெறும் தண்ணீரா, ஜயா ஜனாதிபதியே, சந்தேகப்படும் இடங்களை பார்க்க அனுமதிப்பேன் என கூறியது வெறும் நாடகமா ?, ஆள் விழுங்கி அரசே காணாமல் ஆக்கப்பட்டவருக்கு நீதி சொல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நீதி என்ன?, திருப்பி தரமுன் இருப்பதையாவது தெரிவி இலங்கையரசே, ஏமாற்றாதே எமாற்றாதே காணாமல் போனவர்களின் உறவுகளை ஏமாற்றாதே, இராணுவத்திடம் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடநதது” போன்ற எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் போராட்டகாரர்கள் தாங்கியிருந்தனர்.

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இலங்கையில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அனானி குழு

இலங்கையில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.தீவிரவாதிகளை எச்சரித்து, அனானி என்ற சர்வதேச இணைய முடக்கல் குழு செய்தி அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்களை ...